கடந்த மாதம் 28ஆம் தேதி டெல்லியில் கூடிய காவிரி மேலாண்மை வாரியம், தமிழ்நாட்டுக்கு 9.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், காவிரி நீரை நம்பி இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வந்தனர்.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்: கலக்கத்தில் கடைமடை விவசாயிகள்! - admk
நாகப்பட்டினம்: காவிரியில் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என கர்நாடக அமைச்சர் தெரிவித்திருப்பது, கடைமடை விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இதனிடையே கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இது டெல்டா மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், கர்நாடக அரசின் இந்தப் போக்கை கண்டு கடைமடை விவசாயிகள் கலங்கிப் போய் இருக்கின்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி நீர் வரும் என காத்திருக்கும் விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அறிவித்துள்ள நீரை கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டுவதுடன் மேலாண்மை வாரியக் குழுவிற்கு அழுத்தம் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.