தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமியர்களின் நண்பராக மோடி இருக்கிறார்: பாத்திமா பாபு புகழாரம்...! - AIADMK

நாகப்பட்டினம்: இஸ்லாமியர்களின் நண்பராக மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என அதிமுக நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.

பாத்திமா பாபு

By

Published : Apr 9, 2019, 7:57 AM IST

மக்களவைத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரையால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ”அதிமுக, பாஜக இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் தொழுகை இடங்களில் வெடிகுண்டு வைத்து நாச வேலை செய்த தீவிரவாத கும்பலை அந்த நாட்டிற்கே சென்று அழித்தது மோடி ஆட்சியில்தான். இஸ்லாமியர்களின் நண்பராக மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுகவின் வெற்று வாக்குறுதிகளை நம்பி விடவேண்டாம். ஜெயலலிதா எழுதி வைத்து படிக்கிறார் என்று கிண்டல் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது எழுதி வைத்தாலே படிக்கமுடியாத நிலையில் இருக்கிறார்.

இலங்கை தமிழர்களை கொன்று குவித்ததற்கு காரணம் திமுக என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. தமிழக மக்களுக்கு சீராக மின்சாரத்தைக்கூட வழங்காத திமுகவிற்கு தமிழக மக்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details