நாகை மாவட்டம், புலியூர் சாலையில் 16 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக டிராக்டரை ஓட்டியதால்,அவனை கீழ்வேளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சௌந்தராஜன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர்.
விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் ஓட்டிய சிறுவன் ! - police
நாகை : விபத்து ஏற்படுத்தும் வகையில் 16 வயது சிறுவன் டிராக்டர் ஓட்டியதால் கீழ்வேளூர் காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
![விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் ஓட்டிய சிறுவன் !](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4057817-thumbnail-3x2-nagai.jpg)
விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் ஓட்டியதால் பரபரப்பு !
அப்போது சிறுவனிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தின் உரிமையாளர் புலியூர் பகுதியைச் சேர்ந்த இங்கர்சால் என்பதும் வாகனத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் ஓட்டி வந்ததும், சிறுவனுக்கு 16 வயது என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக டிராக்டரை பறிமுதல் செய்த கீழ்வேளூர் போலீசார் வாகனத்தின் உரிமையாளர் இங்கர்சால் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.