நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஆலை நிர்வாகம் பகுதி-1 இயந்திரத்தை இயக்காமல் நிறுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களும், தொழிலாளிகளும் வேலையிழந்துள்ளனர்.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரேஷன் அரிசி விநியோகம் பாதிப்பு - owners
நாகப்பட்டினம்: லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் தொடர் வேலை நிறுத்தத்தினால் ரேஷன் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரிசி ஆலையில் சன்னரக நெல் 50 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு இருந்தும் அதனை அரைக்காமல் ஆலை அலுவலர்கள் கமிஷன் தொகைக்காக ஈரோடு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் ஆலைகளுக்கு அனுப்பிவைக்கின்றனர். இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதும் பொது விநியோக திட்டத்திற்கு செல்ல வேண்டிய ரேஷன் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, ‘உடனடியாக அரிசி ஆலையை இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை அரசிடம் ஒப்படைப்போம்’ என்றனர்.