தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் ஜோதிடத் தேர்வு: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - astro exam

நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜோதிடத் தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

astro

By

Published : Jul 15, 2019, 10:04 AM IST

ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது. இந்த ஜோதிட கலையை தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் தனியார் ஜோதிட வித்யாலயம் சார்பில் நேற்று ஜோதிடத் தேர்வுகள் நடைபெற்றன. ஆண்டுக்கு இருமுறை, அடிப்படை, மேல்நிலை, முதுநிலை, ஆகிய மூன்று பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

நாகையில் ஜோதிடத் தேர்வு: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழ்நாடு முழுவதும் 93 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் சார்பில், ஜோதிட தேர்வு மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் 175 பேர் தேர்வு எழுதினர். வயது வித்தியாசமின்றி ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஆர்வத்துடன் ஜோதிட தேர்வு எழுதினர்.

ABOUT THE AUTHOR

...view details