மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் பாதுகாப்பு உறுதிதன்மை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
'கோடைக்கால குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ள தயார்..!' - மயிலாடுதுறை ஆட்சியர் - மயிலாடுதுறை
மயிலாடுதுறை: கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பின்னர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன. முழு நேரமும் கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ள விதிகளின்படி வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளன. குடிநீர் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தெரிவிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது" என்றார்.