ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. மேலும், தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவினை உறுதி செய்யும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு...!
நாகப்பட்டினம்: நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிளுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
சங்கல் பத்ரா
அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்ட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சங்கல் பத்ரா படிவங்கள் வழங்கப்பட்டது. அதில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய மக்களாகிய நாங்கள், எந்த ஒரு ஜாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல், நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்களிப்போம் என்று உறுதி கூறுகிறோம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.