நாகப்பட்டினத்தையடுத்த நாகூர் கடற்கரையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். பருவமழை பொய்த்ததின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
நாகை: மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நாகூரில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
இந்நிலையில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நாகூர் கடற்கரையில் இன்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.