நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சுரேஷ் குமார் வாக்கு எண்ணும் மையத்தை நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வாக்கு எண்ணிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் - நாகை மாவட்ட ஆட்சியர் "மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள ஊழியர்களுக்கு இணையதள வசதி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
பொதுமக்கள் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக, தேர்தல் ஆணையம் சுவித்தா என்ற செயலியை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.