தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுதுடன், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்ந்து நடைபெறஉள்ளது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.
நாகையில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடுகளுக்கு அஞ்சல் அட்டை! - collector sureshkumar
நாகை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவுவை வலியுறுத்தி, வீடுகளுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக மக்களவைத் தேர்தலில் நாகை மாவட்டம் முழுவதும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, அஞ்சல் துறை மூலம் வீடுகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் புகைப்படத்துடன் அஞ்சல் அட்டை அனுப்பும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.