தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரிடர் சேவைக்கு தமிழ்நாட்டில் 639 குழுக்கள் அமைப்பு! - revenue commissioner radhakrishnan

நாகை: தமிழ்நாட்டில் 4399 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு, பேரிடர் சேவையில் ஈடுபட 639 பல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன்

By

Published : Oct 17, 2019, 5:44 PM IST

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் உள்ள சூழலில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நாகையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகை அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவரிடம், குப்பைகளை அகற்றாத ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் மீது பொதுமக்கள் புகார் கூறினர்.

இதனால் அலுவலர்களை எச்சரித்த ராதாகிருஷ்ணன், களத்தில் இறங்கி அவரே தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பேரிடர் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாட்டில் மொத்தம் 4399 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும், பேரிடர் சேவையில் ஈடுபட 639 பல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மேலும் படிக்க: பேரிடர் கால தற்காப்பு - மாணவர்களுக்குச் செய்முறை விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details