நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் நிலம், ஆழமற்ற கடல் பகுதிகளில் 158 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி, திருமுல்லைவாசல், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்திற்கு, அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்துத விவசாயிகள் போராட்டம் இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதை நிறுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்கள், டெல்டா மாவட்ட மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கின்ற திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.