தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநாங்கூரில் 12 வித கோலத்தில் எழுந்தருளி மணமுடித்துக்கொண்ட சிவனும் பார்வதியும்!

சீர்காழி அருகே திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

By

Published : May 31, 2022, 3:55 PM IST

Updated : May 31, 2022, 4:13 PM IST

திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருக்கல்யாணம் tirukkalyanam-with-12-lord-shiva-ambals-in-thirunangur
திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருக்கல்யாணம் tirukkalyanam-with-12-lord-shiva-ambals-in-thirunangur

மயிலாடுதுறைமாவட்டம், சீர்காழி அருகே திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து, பின்பு சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்டு, மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்ததாகவும், அதைத்தொடர்ந்து 12 சிவபெருமான்கள் 12 அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா நடைபெறுவது வழக்கம்.

இதனைக்கொண்டாடும் விதமாக இன்று (மே.31) 12 சிவபெருமான்கள் திருகல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருக்கல்யாணம்

அதனை முன்னிட்டு திருநாங்கூர் ஸ்ரீ அஞ்சனாக சமேத ஸ்ரீ மதங்கீசுவர சுவாமி, திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ சந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தபுரீசுவர சுவாமி,

திருநாங்கூரில் 12 வித கோலத்தில் எழுந்தருளி மணமுடித்துக்கொண்ட சிவனும் பார்வதியும்!

செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணைநாயகி சமேத ஸ்ரீநாகநாதசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ நம்பிரியான் சமேத ஸ்ரீ நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரசுவாமி, பெருந்தோட்டம் ஸ்ரீஅதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தரநாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவரசுவாமி, நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகை சமேத நயனவரதேசுவசுவாமி ஆகிய 12 சிவபெருமான் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர்சுவாமி கோயிலில் எழுந்தருளினர்.

சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு 12 சுவாமி சமேத அம்பாள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண கோலத்தில் மதங்க ரிஷிக்கு காட்சி கொடுத்தனர்.

பின்னர் வேதபாராயணம், திருமுறை பாராயணம், கைலாயவாத்தியங்கள், பஞ்சவாத்தியங்கள், நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிக்கைகள் முழங்க 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: மட்டுவார்குழலி அம்பாள் திருக்கல்யாணம்

Last Updated : May 31, 2022, 4:13 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details