மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று நிறைவுற்றன.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கும்பாபிஷேகம் ஆனதுதசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரியசுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க : மன்னார்குடி அருகே இராமநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா