தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக் டாக் திவ்யா கைது: ரசிகர்கள் அதிர்ச்சி - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டிக் டாக்கில் பிரபலமான திவ்யா மற்றொரு டிக் டாக் பிரபலம் குறித்து அவதூறு பரப்பியதால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டிக் டாக் திவ்யா கைது
டிக் டாக் திவ்யா கைது

By

Published : Sep 17, 2021, 3:17 PM IST

நாகப்பட்டினம்: தஞ்சாவூர் மருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. டிக் டாக் செயலி மூலம் இவர், காணொலி வெளியிட்டு பிரபலம் ஆனார்.

சமீபத்தில் தன்னை காதலித்து ஏமாற்றிச் சென்ற கார்த்திக் என்பவரைத் தேடிச் சென்றபடி திவ்யா வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகின.

கரோனா காலத்தில் திருநங்கைகள் மக்களை மிரட்டி காசு பறிப்பதாக அண்மையில் காணொலி ஒன்றை வெளியிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏராளமான திருநங்கைகள் திவ்யாவை காலில் விழவைத்து அதனைக் காணொலியாகப் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

மற்றொரு டிக் டாக் பிரபலமான தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருடன் திவ்யாவுக்கு காணொலி வெளியிடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஒருவருக்கொருவர் தாக்கி, காணொலி வெளியிட்டுவந்தனர். சுகந்தி குறித்து டிக் டாக் திவ்யா அவதூறு பரப்பி காணொலி வெளியிட்டார்.

இது தொடர்பாக டிக் டாக் சுகந்தி கடந்த மாதம் 14ஆம் தேதி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "நாகலாபுரம் பகுதியில் உள்ள எனது வீட்டில் நான், எனது அக்கா நாகஜோதி, எனது தந்தை ராஜு, எனது 16 வயது மகள் ஆகியோர் பாலியல் தொழில் நடத்திவருவதாக யூ-ட்யூபில் டிக் டாக் திவ்யா அவதூறு பரப்பிவருகிறார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

காவல் துறையினர் டிக்டாக் திவ்யாவைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் நாகப்பட்டினம் பகுதியில் திவ்யா தலைமறைவாக இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து தேனிக்கு அழைத்துவந்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திவ்யாவை கைதுசெய்து, நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!

ABOUT THE AUTHOR

...view details