நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் காவிரி கட்டத்தில் நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் அனுக்கிரகத்தின்படி, கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் இந்த காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்களது பாவத்தைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
இந்த 10 நாள் உற்சவத்தை ஒட்டி, மயிலாடுதுறையில் ஸ்ரீ மாயூரநாத ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது.
ஸ்ரீ மாயூரநாத ஆலய கொடியேற்றம் இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து உற்சவத்தின் முக்கிய விழாவான 13ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கோயில்களிலிருந்து சுவாமிகள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி அஸ்திர தேவருக்கு, சுவாமி தீர்த்தம் கொடுக்கும் கடைமுக தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
இதையும் வாசிங்க : புரோக்கர்கள் பிடியில் பாலக்கோடு சந்தை - விவசாயிகள் வேதனை.