தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரில் நீர் இல்லாமல் செயற்கை நீரூற்றில் நடந்த ஐப்பசி மாத துலா உற்சவம்! - தீர்த்தவாரி

காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில், பக்தர்கள் புனித நீராடுவதற்கு செயற்கையாக நீண்ட பைப் லைனில் ஷவர் போன்று தண்ணீர் ஊற்றி அமைக்கப்பட்டு ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது.

மயிலாடுதுறையில் களைகட்டிய ஐப்பசி மாத துலா உற்சவம்
மயிலாடுதுறையில் களைகட்டிய ஐப்பசி மாத துலா உற்சவம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 8:57 PM IST

மயிலாடுதுறையில் களைகட்டிய ஐப்பசி மாத துலா உற்சவம்

மயிலாடுதுறை:கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளில், கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி அவர்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வது இந்துமத நம்பிக்கையில் ஒரு வழக்கமாகும். இப்படி மனிதர்களின் பாவங்களைப் போக்கப் புனித ஆறுகள் உள்ளன. ஆனால் புனித நீர்களில் படர்ந்துவிடப்படும் மனிதர்களின் பாவங்களை, ஆறுகள் எவ்வாறு போக்கிக்கொள்ளும். இது குறித்து பல புராணக்கதைகள் அவ்வப்போது மதநம்பிக்கையாவார்களால் நம்பப்பட்டு வருகிறது.

பக்தர்களின் பாவச் சுமையால் கருமை நிறமடைந்த நதிகள் அணைத்தும், தங்கள் பாவச் சுமைகளைப் போக்கிக் கொள்ளச் சிவபெருமானை வேண்டிய போது, நதிகள் அனைத்தும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதமுள்ள 30 நாள்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில், புனித நீராடி சிவனை வழிபட்டு பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாகப் புராண வரலாறு கூறுகிறது.

இதனால் காசிக்கு நிகரான புனிதத்தன்மை பெற்றது மயிலாடுதுறை என்று போற்றப்படுகிறது. நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி, சிவனை வழிபட்டு தங்களின் பாவச் சுமைகளைப் போக்கிக் கொண்டதால், அப்பகுதியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் நாளான இன்று (அக்.18) தீர்த்தவாரியுடன் துவங்கியது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாதது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால், மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புஷ்கர தொட்டியில் போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி, பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏதுவாக புனித நீர் தெளிக்கும் வகையில் பிரத்தியேகமாக நீண்ட பைப் வரிசையில் ஷவர் போலத் தண்ணீர் தெளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர். தொடர்ந்து அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம் வளர்த்த நாயகி உடனாகிய அய்யாரப்பர், தெப்பக்குளம் மற்றும் மலைக்கோயில் விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரண்டு பக்க கரைகளிலும் எழுந்தருளினர்.

அங்கு அஸ்திர தேவருக்குப் பால், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். தொடர்ந்து தினந்தோறும் மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்வாகச் சிவ வைணவ தலங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்சவமாகத் திருக்கல்யாணம், தேரோட்டம், அமாவாசை தீர்த்தவாரி, குடமுழுக்கு, முடவன் முழுக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பக்தர்கள் நிறைந்து விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதையும் படிங்க:தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டி.பி.சுரேஷ் குமார் பதவியேற்பு

ABOUT THE AUTHOR

...view details