மயிலாடுதுறை: சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தை சேர்ந்த கந்தன், ரமேஷ், சூரன், சின்னையா, வல்லரசு, மாரியப்பன், சித்திரவேல் உள்ளிட்டோருக்கு சொந்தமான 20 படகுகளில் 120க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (மே7) அதிகாலை நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசி உள்ளது. இதில் கந்தன், ரமேஷ், சூரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான மூன்று படகுகள் நிலை தடுமாறி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை அறிந்த அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தவர்களை மீட்டு தங்கள் படகுகள் மூலம் கரை சேர்த்தனர்.