நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளில் சென்ற மாதம் 4.5 கிலோ வெள்ளிப்பொருள்களும், 59 சவரன் தங்க நகைகளும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதனையடுத்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையம், கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்திரனம், உத்தரவின் பேரில் நகர காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து புலனாய்வு செய்து அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் சட்டையப்பர் மேலத்தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.