நாகை மாவட்டம் காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமன் மகன் பாஸ்கர்(44). இவருக்கு கடந்த 27ஆம் தேதியன்று பிறந்தநாள் என்பதால், நண்பர்களை வரவழைத்து வாழைத் தோப்பில் கறி விருந்து ஏற்பாடு செய்துள்ளார். சுமார் 20க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் அருகருகே அமர்ந்து பெரிய வாழை இலையில் சாப்பிட்டுள்ளனர். அப்போது, சிலர் புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்... விருந்தில் பங்கேற்ற 18 பேர் மீது வழக்கு! - nagapattinam corona virus
நாகை: வாழைத்தோப்பில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கறி விருந்தில் பங்கேற்ற 18 நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகை
இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், கறி விருந்தில் பங்கேற்றதாக 18 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், கறிவிருந்து ஏற்பாடு செய்த பாஸ்கரன், விமலன், கலியமூர்த்தி ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்த கணவர் - மனைவி தீக்குளித்து தற்கொலை!