நாகை மாவட்டத்தை அடுத்த புத்தூர் அருகே, நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாரண்யத்திலிருந்து வேகமாக வந்த மூன்று லாரிகளை தடுத்துநிறுத்தி ஆய்வு செய்ததில், லாரிகளில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது.
மணல் கடத்திய மூன்று லாரிகள் பறிமுதல் - Sand theft
நாகை: மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லாரிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Three lorry seized for sand theft in nagai
பின்னர் லாரிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் சீர்காழி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சசிகுமாரை கைதுசெய்தனர். மேலும், எங்கிருந்து மணல் கடத்திவரப்பட்டது என தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மணல் வேதாரண்யத்திலிருந்து பாப்பாக்கோவில் பகுதியிலுள்ள தனியார் நிறுவன கட்டுமானப் பணிக்குக் கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.