தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேருக்கு கரோனா - சக பணியாளர்கள் அச்சம் - நாகை அரசுப் பேருந்து பணிமனை

நாகை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சக ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Nagai govt. bus depot
நாகை அரசுப் பேருந்து பணிமனை

By

Published : Sep 23, 2020, 10:47 AM IST

நாகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின், நாகை மண்டல அலுவலகம் மற்றும் பணிமனை இயங்கி வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாகை பணிமனையில் ஓட்டுநராக பணிபுரியும் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மூன்று நபர்களும் நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு

ஓட்டுநர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பணிமனையில் உள்ள அனைத்து பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது.

இதற்கிடையே அடுத்தடுத்து மூன்று ஓட்டுநர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் நாகை பணிமனையில் பணியாற்றிவரும் சக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பால் வியாபாரி கொலை வழக்கு - எட்டு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details