மயிலாடுதுறை ரயில் நிலையத்தின்ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பக்கிரிசாமி(47) என்பவர் தீபாவளியையொட்டி, நேற்று (அக்.25) இரவு பணியில் இருந்தார். அப்போது ரயில்வே பிளாட்பாரத்தில் நின்ற சிலர் கூச்சல் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதனால் பக்கிரிசாமி, அங்கு சென்று அவர்களிடம் கூச்சலிடுவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்கும், ரயில்வே காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞர்கள் திடீரென்று பக்கிரிசாமியின் வாக்கிடாக்கியை பிடிங்கி உடைத்ததோடு அவரை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து பக்கிரிசாமி மயிலாடுதுறை ரயில்வே இரும்புபாதை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.