தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் நீரில் மூழ்கும் நெற்பயிர்கள்! - சீர்காழியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

நாகை: சீர்காழி அருகே பொறைவாய்க்காலில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கரிலுள்ள நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

paddy-affected-by-heavy-rain
paddy-affected-by-heavy-rain

By

Published : Dec 1, 2019, 10:01 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள எடமணல் கிராமத்தில் பொறைவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விவசாய நிலங்களில் வீணாக பாய்ந்துவருகிறது. இதனால் சாகுபடிக்கு தயாரான நிலையிலுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில், சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா விதைப்பு மற்றும் நடவு பணி செய்தபோதும், கடைமடைக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேராததால் முதல் முறையாக நேரடி விதை செய்தது அனைத்தும் முளைக்காமல் வீணானது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் நல்ல நிலையில் நெற்பயிர்கள் வளர்த்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சீர்காழி பகுதியில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறு, வாய்க்கால்களும் நிரம்பியுள்ளது.

கனமழையால் நீரில் மூழ்கும் நெற்பயிர்கள்

ஆனாலும் கால்வாய்களை முறையாக தூர்வராமலும் கரைகளை பலப்படுத்தாமலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் செய்ததால் தற்போது கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாகுபடிக்கு தயாரான நிலையிலுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறை அலட்சியத்தால் ஆண்டுதோறும் இதே நிலைதான் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கழகத் தலைவரா? கழக தலைவரா? - பிழையை கண்டுகொள்ளாமல் விட்ட திமுகவினர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details