மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற 'பட்டினப் பிரவேசம்' விழா (Pattanapravesham) கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆதீன குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச விழா இன்று (ஜூன் 10) இரவு 9 மணி அளவில் நடைபெற்றது.
மனிதனை மனிதன் சுமந்து செல்வதா என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆண்டு பட்டினப் பிரவேசத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஆன்மீக நிகழ்வுகளில் அரசு தலையிடுவதற்கு பக்தர்கள், இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்நாடு அரசு தடையை வாபஸ் பெற்றது. பின்னர் கடந்தாண்டு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டினப் பிரவேச திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில் மனிதனை மனிதன் சுமந்து செல்வது மனித உரிமை மீறல் என்று கூறி பட்டினப் பிரவேச விழாவிற்கு திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ்மண் தண்ணூரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: Pattanapravesham: மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்க முடியாது! பட்டணப்பிரவேசத்திற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு