நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு, அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், மயிலாடுதுறை நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பொது மக்கள் முகக் கவசம் அணியாமல், தகுந்த இடைவெளி கடைபிடிக்காமல் செயல்பட்டு வருகின்றனர்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 100 அபராதம் - நகராட்சி நிர்வாகம் - Mayiladuthurai
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால் கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க அரசு அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தினர் முகக் கவசம் அணியாமல் நகரில் வலம் வருபவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 3) காலை முதல் முகக் கவசம் அணியாமல் வந்த 100க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூபாய் 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.