மயிலாடுதுறை:தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான சைவ ஆதீன மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தின் மடாதிபதி தீபாவளி பண்டிகை வாழ்த்து அருளாசி தெரிவித்தார். அவர் கூறிய அருளாசியில் நாமெல்லாம் மற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் நம்மால் முடிந்த அளவு அவர்களையும் கொண்டாட வைத்து ஒரு திருப்தி படுத்துவது இந்த நன்னாளாகும்.
இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்... திருவாவாடுதுறை ஆதினம்... - தீபாவளி பண்டிகை வாழ்த்து அருளாசி
திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலமான தேசிக பரமாச்சாரியார் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஆசி வழங்கினார்.
Etv Bharatதிருவாவாடுதுறை ஆதினம் தீபாவளி ஆசி வழங்கினார்
பெரியோர்களிடம் ஆசி பெற்று திருக்கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து, நன்னாளை கொண்டாடுகிறோம். குழந்தைகள் பட்டாசுகளை கவனமுடன் வெடிக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் தீபாவளி தினத்தில் திருக்கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்யவேண்டும், எல்லோரும் ஒற்றுமையாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். அனைவருக்கும் செல்வம் கிடைக்க இறைவனை பிரார்த்தித்து ஆசி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை - வேலூரில் குவிந்த மக்கள்