நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வருபவர் காவலர் ஜெகன்ராஜா(28). இவர் நேற்றிரவு திருவாடுதுறை கடைவீதியில் கூல்டிரிங்க்ஸ் கடை முன்பு ஏற்பட்ட தகராறில் மதி(47) மற்றும் நாட்டாமை செல்வராஜ்(45) ஆகியோரை கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்நிலையில், அவரை கைது செய்த குத்தாலம் காவல்துறையினர் ஜெகன்ராஜாவைக் கைது செய்து அவரிடமிருந்த 9 எம்.எம் கைத்துப்பாக்கியையும் மீதமிருந்த 7 குண்டுகளையும் கைப்பற்றினர். மேலும், இரண்டு காலி தோட்டாவின் மூடியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
2 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆதினத்தின் பாதுகாவலர் கைது - gun shoot
நாகை: இரண்டு பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய திருவாடுதுறை ஆதினத்தின் மெய்க்காவலர் சிறையிலடைக்கப்பட்டார்.
குத்தாலம் காவல் நிலையம்
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜெகன்ராஜா மீது கொலை முயற்சி ஆயுதச்சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஜெகன்ராஜாவை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து திருவாடுதுறை ஆதீனத்திற்கும் சம்பவம் நடைபெற்ற கடைவீதி பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.