தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் - காரைக்கால் மின்சார ரயில் சேவை ஆய்வு - இருப்புப் பாதை வழி

நாகப்பட்டினம்: மின்மயமாக்கப்பட்ட திருவாரூர் - காரைக்கால் ரயில் வழித்தடத்தை, தென்னக ரயில்வே பாதுகாப்பு அலுவலர்கள் சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தனர்.

Electric train testing
thiruvarur to karaikal Electric train

By

Published : May 23, 2020, 9:10 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் - காரைக்கால் இருப்புப் பாதை வழித்தடங்களை மின் பாதை வழித்தடங்களாக மாற்றும் பணிகள் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டன.

திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம், காரைக்கால் வரை 50 கிலோமீட்டர் தூரம் உள்ள இப்பணிகள் நிறைவு பெற்றதால், திருவாரூர் காரைக்கால் மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடத்தை, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தனர்.

திருவாரூரிலிருந்து சிறப்பு ரயில் மூலம் நாகப்பட்டினம் வந்த தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், ரயில் வழித்தடத்தின் தன்மை மற்றும் மின்மயமாக்கப்பட்ட சாதனங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக திருவாரூருக்கு பயணிகள் மின்சார ரயில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டது.

திருவாரூர் - காரைக்கால் இருப்புப்பாதை மின்மயமாக்கப்பட்ட வழித்தடமாக மாறி பயணிகள் மின்சார ரயில் இயக்கப்பட உள்ள செய்தி ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:2000 டன் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை

ABOUT THE AUTHOR

...view details