தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1330 பள்ளி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய திருவள்ளுவர் உருவம்! - Thiruvalluvar image creation and achievement

நாகை : சீர்காழியில் 133 அடி நீள 1330 பள்ளி மாணவர்கள் அமர்ந்து திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.

thiruvalluvar-image-creation-and-achievement

By

Published : Nov 15, 2019, 8:47 PM IST

நாகை மாவட்டம், சீர்காழியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் சாதனை முயற்சியாக 1330 குறள்களை, தலா ஒருவர் வீதம் கூறிவிட்டு தரையில் அமர்ந்து திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கினர்.

அப்போது 133 அடி நீளத்தில் 1330 மாணவ, மாணவிகள் தலா ஒரு குறள் வீதம், ஒப்புவித்து அனைவரும் அடுத்தடுத்து அமர்ந்து திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கினர். 18 நிமிடங்களில் உருவத்தை உருவாக்கியும், 20 நிமிடங்களில் 1330 குறள்களை ஒப்புவித்தும், 40 நிமிடங்களில் அமர்ந்து திருவள்ளுவர் உருவத்தை தோற்றுவித்தும் சாதனை செய்தனர்.

1330 பள்ளி மாணவர்கள் அமர்ந்து திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கி சாதனை

இச்சாதனை முயற்சியை சோழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பு, திருக்குறள் பண்பாட்டுப் பேரவை அமைப்பினர் இணைந்து அங்கீகரித்து சாதனை சான்றிதழை வழங்கினர்.

இதையும் படிங்க:

ஆபத்தைத் தாங்கி நிற்கும் பாலம்: அலுவலர்கள் அலட்சியம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details