தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: திருவாவடுதுறை ஆதீனம் நிவாரண உதவி - thiruvaduthurai adhinam latest news

நாகை: திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 12 லட்சத்திற்கான காசோலையை மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட அலுவலர் மகாராணியிடம் வழங்கினார்.

திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம்
திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம்

By

Published : Apr 20, 2020, 9:42 PM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது‌. இந்த வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, மக்களுக்கு உதவி செய்வதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் நிவாரண உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறையில் உள்ள சைவ ஆதீனங்களின் புகழ்பெற்று விளங்கக்கூடிய திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 12 லட்சம் ரூபாய் காசோலையை மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட அலுவலர் மகாராணியிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: 'உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக்

ABOUT THE AUTHOR

...view details