தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதுச்சேரியின் அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கியது பாஜக' - திருமுருகன் காந்தி விமர்சனம்!

மயிலாடுதுறை: புதுச்சேரியின் அரசியலமைப்பை பாஜக கேலிக் கூத்தாக்கிவிட்டது. அக்கட்சியை புதுச்சேரி, தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி
செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி

By

Published : Feb 23, 2021, 7:54 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு ஆதரவாளர் எனக் கூறிக்கொள்கிறார். ஆனால், வேளான் சட்டங்களை நீக்க முன்வரவில்லை. அதிமுக அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி அனைத்துப் போராட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். இந்த அதிமுக அரசு தங்களது ஊழலை மறைப்பதற்காகவே பாஜகவிற்கு துணை போகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி

ஏழு தமிழர் விடுதலையில் அதிமுக அரசுக்கு அக்கறையில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை ஆளுநர் அலட்சியபடுத்துகிறார். புதுச்சேரியில் அரசியலமைப்பை பாஜக கேலிக்கூத்தாக்கிவிட்டது. அக்கட்சியை புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாடு மக்களும் பாஜக-வை புறந்தள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சியின் கடைசி காலத்தில் நலத்திட்ட உதவிகளையும், தள்ளுபடியும் வழங்குவது, தேர்தல் நேரத்தில் செலவு செய்ய தங்களது கட்சியினருக்குத் தேவையான பணத்தைக் கொண்டு சேர்பதற்கான வழியாகும்” என விமர்சித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் கூட்டத்தில் காலியான இருக்கைகள் - மக்கள் பங்கேற்க விரும்பவில்லையா?

ABOUT THE AUTHOR

...view details