தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"டேப் முக்கியமல்ல; உயிர்தான் முக்கியம்" கரோனா நிவாரண நிதி வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவன்! - CM corona relief fund

ஆன்லைன் வகுப்பிற்காகப் டேப் வாங்க சிறுக, சிறுக சேர்த்த ரூ.10,135 பணத்தை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு ஆட்சியரிடம் வழங்கி, உதவிக்கரம் நீட்டிய மூன்றாம் வகுப்பு சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

student
student

By

Published : May 14, 2021, 7:30 AM IST

கரோனா நிவாரண நிதியை அனைவரும் தாராளமாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். குறிப்பாக சைக்கிள் வாங்க வைத்திருந்தப் பணத்தை சிறுவன் வழங்கியது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது.

இதேபோல் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் தனது ஆன்லைன் வகுப்பிற்கு 'டேப்' வாங்குவதற்காகத் தான் சேர்த்து வைத்திருந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த சக்திவேல் சீதா தம்பதியினரின் மகன் சுதாசன். இராமகோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுதாசன் தனது ஆசிரியரின் அறிவுரைப்படி, ஆன்லைன் படிப்பிற்காக 'டேப்' வாங்குவதற்கு தாய் தந்தையிடம் பணம் வாங்கி சஞ்சாய்கா திட்டத்தில் சிறுக, சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கரோனா நிவாரணத்திற்குப் பொது மக்கள் நிதி வழங்கவேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை தொலைக்காட்சிகளில் பார்த்த சிறுவன், தானும் நிதி வழங்க வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளான். அதனை தொடர்ந்து தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற சிறுவன் சுதாசன் 'டேப்' வாங்குவதற்குத் தான் சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரத்து 135 ரூபாய்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கினார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பிடியில் பலர் உயிரிழந்து வரும் நிலையில், 'உயிர் முக்கியமா, டேப் முக்கியமா' என்று பார்த்தபோது உயிர்தான் முக்கியம் என்பதால், தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சருக்கு வழங்கியுள்ளதாக சிறுவன் சுதாசன் தெரிவித்தார். காசோலை வழங்கும் நிகழ்வில் மாணவரின் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள், நாகை திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details