மயிலாடுதுறை: குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.இதனால் பிரகாஷின் வீட்டை அவரது தந்தை ராமகிருஷ்ணன் இரவு நேரங்களில் மட்டும் தங்கி கவனித்துவந்தார்.
மயிலாடுதுறையில் 54 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு - மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் திருடப்பட்டுள்ளன.
வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்க நகை மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
அந்த வகையில் நேற்று மாலை தங்க சென்ற போது வீட்டின் கதவு உடைந்திருப்பதையும், உள்ளே 54 சவரன் தங்க நகைகள், 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ 21 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 45 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்