தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை! - கமல் ஹாசன்! - மக்கள் நீதி மய்யம்

நாகை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நாகை தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

speech
speech

By

Published : Dec 29, 2020, 1:45 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் நாகை மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். வேளாங்கண்ணி தனியார் விடுதியில் மகளிர் மற்றும் இளைஞர்களிடம் கலந்துரையாடிய அவர், பெண் உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர்களிடையே உரையாற்றிய கமல் ஹாசன், பொள்ளாச்சி பாலியல் குற்ற நிகழ்வில், 600 நாட்களை கடந்தும் யாருக்கும் தண்டனை வழங்கப்படாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.

தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் “ என்றார். அதனைத் தொடர்ந்து நாகை, நாகூர் தர்கா, திட்டச்சேரி உள்ளிட்டப் பகுதிகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட கமல், பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ளச் சென்றார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை! - கமல் ஹாசன்!

இதையும் படிங்க:'என்னை மன்னியுங்கள்' - ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details