தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சீட்டுல சின்னத்த காணோம்...' - மறு தேர்தலுக்கு வாய்ப்பு! - no Murasu symbol on the ballot box at kulayanur

நாகை: தேமுதிக வேட்பாளரின் முரசு சின்னம் வாக்குச் சீட்டில் இல்லாமல் தேர்தல் நடைபெற்றதால் கூழையார் கிராமத்தில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

no Murasu symbol on the ballot box at kulayanur
no Murasu symbol on the ballot box at kulayanur

By

Published : Dec 28, 2019, 10:48 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் நேற்று உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வேட்டங்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்கள் ஆறு பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் சீர்காழி அருகே கூழையார் மீனவ கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்றது.

இதில் வேட்பாளராக போட்டியிட்ட தேமுதிகவைச் சேர்ந்த ஜலபதி என்பவருக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கடைசி 50 வாக்குச் சீட்டுகளில் தேமுதிக சின்னம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பதில் அதிமுக இரட்டை இலை சின்னம் இருந்துள்ளது. இங்கு பதிவான வாக்குககள் மொத்தம் 660 ஆகும்.

கூழையனூரில் வாக்குச் சீட்டில் முரசு சின்னம் இல்லாததால் குழப்பம்

இதனால் தேர்தல் அலுவலர்களிடம் தேமுதிக வேட்பாளரும் அதிமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேட்பாளரின் சின்னம் இல்லாமல் வாக்காளர்கள் வாக்கு அளித்துள்ளதால் கூழையார் கிராமத்தில் மறு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிங்க:விதை விருட்சமாய் மாறி சமூகத்திற்கு பயன்படட்டும் - அசோக்குமாரின் பயணம் தொடரட்டும்

ABOUT THE AUTHOR

...view details