தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா சொத்துகள் முடக்கத்தில் உள்நோக்கமில்லை! - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை: சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

manian
manian

By

Published : Feb 11, 2021, 12:20 PM IST

நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் யாத்ரீகர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள இக்கட்டிடத்திற்கு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் அசல் வித்தாக இருக்கிற தொண்டர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். சசிகலா வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றவர்கள் அதிமுக தொண்டர்கள் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், கூட்டுறவு தேர்தல்களை சந்தித்த அமமுகவின் பலம் என்ன என்பது நாட்டுக்கே தெரியும்.

சசிகலாவின் சொத்துகள் முடக்கப்படுவது மத்திய அரசின் நடவடிக்கை. நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டது. ஆணைகள் பிறப்பிக்கபட்டதால் அதிகாரிகள் பணிகளை செய்கின்றனர். சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ‘மத்திய அரசுக்கு அடிபணியும் அதிமுக அரசு’ - கனிமொழி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details