நாகை மாவட்டம் மயிலாடுதுறை தனியூர் சாலியத் தெருவில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு கார், சரக்கு வாகனம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த வாகன உரிமையாளர்கள், அக்கம் பக்கத்தினர் விரைந்துவந்து வாகனங்களில் எரைந்து எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதிகாலையில் வாகனங்களுக்கு தீவைத்தவருக்கு வலை - Thrilling at Mayiladuthurai
நாகை: மயிலாடுதுறையில் நின்றிருந்த கார், சரக்கு வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்களை சிசிடிவி காட்சிகள் பதிவைக் கொண்டு காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
![அதிகாலையில் வாகனங்களுக்கு தீவைத்தவருக்கு வலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4707933-thumbnail-3x2-cats.jpg)
கொளுந்து விட்டு எரியும் வாகனம்
வாகனங்களுக்கு தீவைப்பு
இச்சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, அதேப் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோலை ஊற்றி தீவைத்தது தெரியவந்தது. அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். அதிகாலையில் வாகனங்களுக்கு தீவைத்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.