தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைகீழாக நின்று நூதன முறையில் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டம்! - ரயில் பயணிகள் சங்கத்தினர்

மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

தலைக்கீழாக நின்று நூதன முறையில் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டம்
தலைகீழாக நின்று நூதன முறையில் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டம்

By

Published : Jul 3, 2022, 12:51 PM IST

மயிலாடுதுறைரயில் பயணிகள் சங்கத்தினர் (இன்று ஜூலை 3) காலை 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலையம் முன்பு தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், 10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூர் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் அனைத்து வழித்தடத்தோடும் இணைத்திட வேண்டும்; மயிலாடுதுறை - திருச்சி விரைவு வண்டியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும்; மயிலாடுதுறை - திருநெல்வேலி பேசஞ்சர் வண்டியை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கும் முடிவைக் கைவிட்டு திருநெல்வேலி வரை இயக்க வேண்டும்; மயிலாடுதுறை பெங்களூரு பேசஞ்சர் வண்டியை மீண்டும் உடனே இயக்க வேண்டும் என நான்கு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தலைகீழாக நின்று நூதன முறையில் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டம்!

இதில் பத்துக்கும் மேற்பட்டோர் தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ரயில் பயணிகள் சங்கம், மயிலாடுதுறை வர்த்தக சங்கம், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அருந்ததியர் குடியிருப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details