மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா வழுவூரில், அஷ்டவீரட்ட தலங்களில் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டுமானங்களை உடைய இந்தக் கோயிலில், இரண்டாம் ராஜராஜன் உள்ளிட்டப்பல்வேறு சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் இந்து அறநிலையத்துறைக்குச்சொந்தமான இந்த கோயிலில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதனால் கோயில் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.