நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவல் சரகத்துக்குட்பட்ட பர்மா காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (41). இவர், கடந்த 17ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் பூம்புகார் சென்று திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கூரையைப் பிரித்து, வீட்டில் வைத்திருந்த இரண்டரை பவுன் எடை கொண்ட 2 தங்க செயின்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து தனிப்படை சிறப்பு காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக், செந்தில் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.