மயிலாடுதுறை: விழுப்புரம் மாவட்டம், எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச் சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் சாராயம் விற்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா உத்தரவின் பேரில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள 14 காவல்நிலைய சரகங்களில் கள்ளச்சாராயம், மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் கடத்தி விற்பனையில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாக தேடி வந்து உள்ளனர். இதில் 56 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.