நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே முருகமங்கலம் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால், சாலையோரம் இருந்த மின்கம்பம் சாய்ந்து வயல் பகுதியில் விழுந்தது. மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மழை பெய்து ஓய்ந்து பத்து நாள்களை கடந்துவிட்ட நிலையிலும், கீழே விழுந்த மின்கம்பம் அகற்றப்படாமல் வயலிலேயே கிடக்கிறது.
மின்கம்பிகள் அறுந்து சாலையோரம் தொங்குவதால் சாலையோரம் செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். மின்கம்பத்தை சரிசெய்ய மின்சாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் மின்கம்பம் அகற்றப்படவில்லை.
தெரு விளக்குகளும் எரியாததால், இரவு நேரத்தில் கிராம மக்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். மின்கம்பம் வயலில் சாய்ந்து கிடப்பதால், விளைநிலங்களுக்கு செல்ல அச்சமாக உள்ளது. உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாமன்னர் அசோகர் ஒரு சித்தாந்தம் - டி.எம்.கிருஷ்ணா