நாகப்பட்டினம்: சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் உள்ளூர் எச்சரிக்கையைக் குறிக்கும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புதுச்சேரிக்கு தென் கிழக்கு திசையிலும், சென்னைக்கு தென் கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.