சீர்காழி: சீர்காழி அருகே மக்கள் பயன்பாட்டுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான பேருந்து நிலையத்தை அதிமுக எம்எல்ஏ பாரதி திறந்துவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாயக்கர் குப்பத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையத்தை சீர்காழி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி 2020-21இன் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது.
இந்தப் புதிய பேருந்து நிலையத்தை சீர்காழி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி பாரதி திறந்துவைத்தார். முன்னதாக நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் சிங்காரவேலர் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
சீர்காழி நாயக்கர் குப்பத்தில் பேருந்து நிலையம் திறப்பு உடன் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ கே சி சந்திரசேகரன், ஊராட்சி ஆணையர் கஜேந்திரன், வைத்தீஸ்வரன்கோவில் பேரூர் கழக செயலாளர் போகர் சி. ரவி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊர் நாட்டார் பஞ்சாயத்தார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையும் படிங்க : ஈரோடு பேருந்து நிலைய கடைகளை இடிக்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!