தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் தடுப்புசுவர் இடிந்து விழுந்த விவகாரம் - ஒப்பந்தக்காரரின் செலவில் சீரமைப்பு பணி!

நாகை: மயிலாடுதுறை கோயில் குளத்தில் தரமற்ற முறையில் கட்டிமுடிக்கப்பட்டு 13 நாள்களே ஆன தடுப்புசுவர் இடிந்து விழுந்த வீடியோ வைரலான நிலையில் ஒப்பந்தக்காரரின் செலவில் சீரமைப்புபணி நடைபெற்று வருகிறது.

the-issue-collapse-of-the-temple-barrier
the-issue-collapse-of-the-temple-barrier

By

Published : Oct 28, 2020, 12:31 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சியில் உள்ள சம்பந்தர் கோயில் எதிரே உள்ள திருக்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 7.88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படித்துறை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

படித்துறை கட்டிவிட்டு குளத்தின் மையப்பகுதியில் உள்ள நந்தி மண்டபத்தை சுற்றி 10 அடி ஆழத்திற்கு குளத்தை ஆழப்படுத்திவிட்டு அதற்கு தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். இந்நிலையில் தற்போது வாய்க்காலில் வந்த தண்ணீரை குளத்தில் நிரப்பியபோது தடுப்புச்சுவரின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதலங்கள், ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சிதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உத்தரவின் பேரில் ஒப்பந்தக்காரருக்கு பணம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக தடுப்புசுவரை சீரமைத்துதர ஒப்பந்தக்காரருக்கு உத்தரவிட்டதன் பேரில் ஒப்பந்தக்காரரின் செலவில் சீரமைப்புபணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:

கோயில் குளத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details