தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலையில் கரோனா சிகிச்சை மையத்திற்கு தொண்டு நிறுவனம் உதவி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே புத்தூர் கரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான கட்டில்கள், படுக்கைகள் ஹோப் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டன.

மயிலாடுதுறையில் கரோனா சிகிச்சை மையத்திற்கு ரூபாய். 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கிய ஹோப் அறக்கட்டளை
மயிலாடுதுறையில் கரோனா சிகிச்சை மையத்திற்கு ரூபாய். 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கிய ஹோப் அறக்கட்டளை

By

Published : Jun 11, 2021, 12:06 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூர் அரசு கல்லூரியில் அரசின் சிறப்பு கரோனா சிகிச்சை மையம் இயங்கிவருகிறது. இங்கு கரோனா தொற்று பாதிப்பு தொடக்க நிலை நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கபடுகின்றனர்.

ஹோப் அறக்கட்டளை

கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் இந்த மையத்தில் கூடுதல் படுக்கை வசதி அமைக்க கோரிக்கை எழுந்துவந்தது. இந்நிலையில் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோப் அறக்கட்டளை சார்பாக கரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான 30 கட்டில்கள், படுக்கைகள் சீர்காழி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வழங்கப்பட்டன.

இதில் வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், ஹோப் அறக்கட்டளை முதன்மை திட்ட அலுவலர் சாமுவேல் தாமஸ், சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details