நாகை மாவட்டம் மாதானம் மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரம் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அப்பகுதி கிராமங்களில் நடவு செய்யப்பட்ட பயிர்களை அப்புறப்படுத்திவிட்டு காவல்துறையினரின் துணையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் எந்த அறிவிப்பும் இன்றி குறுவை சாகுபடி செய்த நிலங்களில் குழாய் பதிப்பதற்கு இன்று ஏற்பாடுகள் செய்யபட்டன. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தற்காலிகமாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
கெயில் குழாய் பதிக்கும் பணி; 4ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்! - farmer protest
நாகை : கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிராக 4ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்
இதையடுத்து , போராட்டத்தில் ஈடுபட்ட நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இரணியன், விஷ்ணுகுமார், பாலன் மற்றும் விவசாயிகள் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.