மயிலாடுதுறை: வரகடை கிராமத்தில் பழவாறு அருகே உள்ள ஆற்றங்கரை தெருவில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடிகால் ஆறான பழவாற்றில் பேரிடர் மழை காலங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால் மூலமாக வெளியேறும் நீரானது பழவாற்றில் கலப்பது வழக்கம். அதன் காரணமாக பழவாற்றில் இரண்டு கரை தொட்டபடி வெள்ள நீர் கடைபுரண்டு செல்கிறது. வரகடை பழவாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் இரண்டு பக்கக் கரைகளிலும் தடுப்பு சுவர் இல்லாததால் தாழ்வான பகுதி வழியாக உபரிநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகிறது.
பழவாற்றில் வெளியாகும் நீரால் மக்கள் அவதி - தடுப்பு சுவர் கேட்டு மக்கள் கோரிக்கை - Mayiladuthurai District important News
மயிலாடுதுறையில் உள்ள வரகடை கிராமத்தில் பழவாற்றில் கட்டப்பட்டுள்ள பாலம் அருகே தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை எழுந்துள்ளது.
இதனால் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை நடவடிக்கை எடுக்க கோரி அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். கடந்த வாரம் முதல் பழவாற்றில் முழு கொள்ளளவுடன் தண்ணீர் செல்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழை குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிப்பை தடுக்க வரும் காலங்களில் வரகடை பாலம் அருகே இரண்டு பக்க கரைகளிலும் தடுப்பு சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காஞ்சி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர் - பொதுமக்கள் கடும் அவதி