தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது: வசந்தகுமார் எம்.பி. - vanthakumar

நாகப்பட்டினம்: ப.சிதம்பரம் மீது பத்து குற்றச்சாட்டுகளை சுமத்தும் மத்திய அரசு, அதில் ஒன்றுக்குக்கூட ஆதாரத்தை காட்டவில்லை என்று, மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் கூறியுள்ளார்.

எச்.வசந்தகுமார்

By

Published : Sep 12, 2019, 7:31 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”வெளிநாடு சென்று முதலீடுகளை கவர்ந்து வந்ததாகக் கூறும் முதலமைச்சர் பழனிசாமி, என்னென்ன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பதை தெரிவிக்க வேண்டும். ப.சிதம்பரம் மீது பத்து குற்றச்சாட்டுகளை சுமத்தும் மத்திய அரசு, அதில் ஒன்றுக்குக்கூட ஆதாரத்தை காட்டவில்லை.

எச்.வசந்தகுமார்

இந்தியாவில் பெரும் முதலாளிகளின் வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆனால், சிறு தொகையை பெற்றவர்களை திரும்பச் செலுத்த வங்கிகள் நிர்பந்திக்கின்றன” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details